Homeசெய்திகள்உலகம்இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் - பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் – பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்

-

- Advertisement -

இந்தியாவில் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் உரிமம் தொடர்பான நடைமுறைகளே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை தொடங்குவதில் தாமதம் - பாதுகாப்பு விதிமுறைகளே முக்கிய காரணம்

செயற்கைக்கோள் வழி இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. எனினும், பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நிபந்தனைகளை மத்திய அரசு விதித்ததால், சேவை தொடங்கும் பணிகள் தாமதமாகி வந்தன.

we-r-hiring

குறிப்பாக, இந்தியாவில் செயல்படும் ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டுப்பாட்டு மையம் நாட்டுக்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு மற்றும் பயனாளர்களின் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு, அதன் விலை நிர்ணயம் மற்றும் உரிமம் தொடர்பான சில நடைமுறைச் சிக்கல்களும் இறுதி அனுமதி வழங்கப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல்களும் இந்த விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையை வழங்குவதற்கான தேவையான அனுமதிகளில் முக்கியமான முன்னேற்றத்தை ஸ்டார்லிங்க் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நிறைவடைந்ததும், சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஸ்டார்லிங்க் சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ.8,600 என்றும், உபகரணங்களுக்கான கட்டணம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களை நிறுவனம் மறுத்துள்ளது. அவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெளியான தகவல்கள் என்றும், அதிகாரப்பூர்வ கட்டண விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொலைதூர மற்றும் இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஸ்டார்லிங்க் சேவை முக்கிய பங்காற்றும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்தும் உலக நாடுகள்: SIPRI எச்சரிக்கை

MUST READ