Homeசெய்திகள்உலகம்ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?

ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?

-

- Advertisement -

ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புடின், எகிப்து வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறாா்.ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா? ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி (Badr Abdelatty) அவர்களை இன்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ​இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், ஈரானில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிப்பதாகும்.

​மேலும் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைச் சீர்செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

we-r-hiring

போர் விவகாரங்கள் தவிர, ரஷ்யா மற்றும் எகிப்து இடையிலான தானியங்கள் (Grain) மற்றும் எரிசக்தி மையங்களை (Energy Hub) உருவாக்குவது போன்ற பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் ரஷ்யாவின் பங்களிப்பு குறித்து புடின் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

​ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரபு நாடுகளுடன் ரஷ்யா மேற்கொள்ளும் இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

MUST READ