
உலகம் முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
19 வயதில் பாலியல் தொல்லை… பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு…
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம். இந்த சமூக வலைத்தளங்களை சாமானிய மக்கள் முதல் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், அதிபர்கள், பிரதமர்கள், ஊடகங்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், உலகம் முழுவதும் இன்று (மார்ச் 05) இரவு 09.30 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் மற்றும் அதன் செயலிகள் அடியோடு முடங்கியுள்ளன. லாக் இன் ஆகியுள்ள பக்கங்களும் லாக் அவுட் ஆனதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
72-வது பிறந்தநாள் கொண்டாடிய பழம்பெரும் நடிகை… சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கோலாகலம்…
தொழில்நுட்ப கோளாறை விரைவில் சரி செய்யப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.