spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா72-வது பிறந்தநாள் கொண்டாடிய பழம்பெரும் நடிகை... சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கோலாகலம்...

72-வது பிறந்தநாள் கொண்டாடிய பழம்பெரும் நடிகை… சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கோலாகலம்…

-

- Advertisement -
பழம்பெரும் நடிகை சத்யப்பிரியா, எதிர்நீச்சல் சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் தனது 72-வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். 

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை சத்யப்பிரியா. இவர் 1974-ம் ஆண்டு இந்தி திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 1975-ம் ஆண்டு தமிழில் உருவான மஞ்சள் முகமே வருக என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பேரும் புகழும், முன்னிரவு நேரம், கண்ணன் ஒரு கைக்குழந்தை, பைலட் பிரேம்நாத், ஆகியபடங்களில் நடித்திருக்கிறார். சூரிய வம்சம் படத்தில் தேவையாணிக்கு அம்மாவாக நடித்திருப்பார். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடக்கத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர், தொடர்ந்து அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

we-r-hiring
சூரியவம்சம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இவருக்கு பல படங்களில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேபோல தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியிலும் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே என்.எஸ்.முகுந்தன் என்பவரை மணம் முடித்துக் கொண்ட சத்யப்பிரியா, திருமணத்திற்கு பிறகும் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடித்து வந்தார். சுமார் 50வருடங்களா சினிமாவில் உள்ள அவர் இன்று வரை 350-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சத்யப்பிரியா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது 72-வது பிறந்தநாளை சீரியல் படப்பிடிப்புத் தளத்திலேயோ கோலாகலமாக கொண்டாடினார்.

MUST READ