துருவ் விக்ரம் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.
சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரமின் மகனான துருவ், தமிழ் சினிமாவில் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் படத்தில் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 17, தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. வருகின்ற அக்டோபர் 13, இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் துருவ் விக்ரம் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், “மகான் படத்தை பொருத்தவரையில் அந்த படம் சியான் படம். நான் மிகவும் சிறிய ரோலில் தான் நடித்திருந்தேன். ஆனால் அது முக்கியமான ரோல். கார்த்திக் சுப்பராஜ் சாரை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். அவருடைய ‘பீட்சா’ படத்தை முதல் நாள் இரவில் பார்த்தேன். பார்த்துவிட்டு என் நண்பர்களிடம் கதை முழுவதையும் சொன்னேன். கார்த்திக் சாரிடம் இதை நிறைய தடவை சொல்லி இருக்கேன். அவருடைய ‘ஜிகர்தண்டா’ படமும் என்னுடைய பேவரைட் படம் தான். எனவே அவருடன் பண்ண படத்தை நான் என்றுமே ஸ்பெஷலாக தான் பார்க்கிறேன். இருந்தாலும் அதுல சின்ன ரோல் தான் நான் பண்ணதுனால அதுக்கு அடுத்த படத்தை தான் நான் முதல் படமா பார்க்கிறேன். பைசன் படம் தொடங்குவதற்கு முன்னாடியே அப்படிதான் நினைச்சேன்” என்று தெரிவித்துள்ளார்.
#Dhruv Recent
– #Mahaan is a #ChiyaanVikram and #KarthikSubbaraj film, and I have played a small but important role.
– Since my childhood, I have admired Karthik Subbaraj sir; I watched #Pizza on its first-day night show.#Bisonpic.twitter.com/eWQuyrdC0Z— Movie Tamil (@_MovieTamil) October 11, 2025

சமீபத்தில் ‘பைசன்’ படம் தொடர்பான விழா ஒன்றில் பைசன் படம் தான் என்னுடைய முதல் படம் என்று துருவ் விக்ரம் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அது மட்டும் இல்லாமல் ‘மகான்’ பட ரிலீஸின் போதே துருவ் விக்ரம், ஆதித்யா வர்மா ரீமேக் படம் என்பதாலும், மகான் படம் விக்ரம் படம் என்பதாலும் என்னுடைய அடுத்த படம் தான் என் முதல் படம் என்று கூறியிருந்தார். தற்போதும் அவர், அதைதான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.