இயக்குனர் நலன் குமாரசாமி, வா வாத்தியார் படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் கார்த்தியின் 26 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் கார்த்தி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் 2025 டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி, சத்யராஜ், ராஜ்கிரண், கிரித்தி ஷெட்டி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “சத்யராஜ் சார், நான் மொட்டை பாஸ் OG வில்லன் கேரக்டர் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. சரி பார்த்திடுவோம்னு வந்தாரு. அதேபோல் ராஜ்கிரண் சாருடைய கேரக்டருக்கு வேற ஒருத்தர தான் மனசுல வச்சிருந்தேன். ஆனா அந்த கேரக்டருக்கு ராஜ்கிரண் சார் தான் சரியா இருப்பாருன்னு மத்தவங்க சொன்னாங்க. அவர் உள்ள வந்ததுக்கு அப்புறம்தான் புரியுது, ஏன் அவர் எல்லோரோட மனசுலயும் இருக்காருன்னு.
அவர் மிகவும் நுணுக்கமான வித்தைக்காரர். அதுபோல தான் ஆனந்தராஜ் சாரும். எல்லாரும் யோசிச்சு வேலை பாக்குறாங்க. சீனியர்களின் அனுபவம்னா என்னன்னு காட்டுறாங்க. இன்னொரு பக்கம் க்ரித்தி ஷெட்டி. ஏ.ஆர். முருகதாஸ் சார் படங்கள்ல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். அது மாதிரி இந்த படத்திலயும் இருக்கணும்னு நினைச்சு பண்ணி இருக்கோம்” என்று தெரிவித்துள்ளார்.