சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் மதுரவீரன் படத்திலும் நடித்திருந்தார். கடைசியாக இவரது நடிப்பில் படை தலைவன் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவரது நடிப்பில் கொம்புசீவி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், தாமிகா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இயக்குனர் பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இதன் இசையமைப்பாளராகவும், பாலசுப்பிரமணியம் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த படமானது 1996 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள உசிலம்பட்டியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (அக்டோபர் 11) இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.