spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு அதில் விருப்பமில்லை..... 'கல்கி 2898AD - 2' படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன்!

எனக்கு அதில் விருப்பமில்லை….. ‘கல்கி 2898AD – 2’ படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன்!

-

- Advertisement -

நடிகை தீபிகா படுகோன், கல்கி 2898AD – 2 படத்திலிருந்து விலகியது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.எனக்கு அதில் விருப்பமில்லை..... 'கல்கி 2898AD - 2' படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன்!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898AD’ திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளியான இந்தப் படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நாக் அஸ்வின் – பிரபாஸ் கூட்டணியில் கல்கி 2898AD – 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. முதல் பாகத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. பிரபாஸ் தன்னுடைய கமிட்மெண்டுகளை முடித்த பின்னர், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ‘கல்கி 2898AD’ படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீபிகா படுகோன், ‘கல்கி 2898AD – 2’ படத்திலிருந்து விலகிவிட்டதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனக்கு அதில் விருப்பமில்லை..... 'கல்கி 2898AD - 2' படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன்!இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தீபிகா படுகோனின் கதாபாத்திரத்திற்கு வேறு யாரு பொருத்தமாக இருப்பார்? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கினர். அதன்படி சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. மேலும் ஆலியா பட் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் அந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் நடந்த பேட்டியில், ‘கல்கி 2898AD – 2’ படத்திலிருந்து விலகியது குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “எனக்கு இதை பெரிய விஷயமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால் பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்கின்றனர். வார இறுதியில் அவர்கள் வேலை செய்வதில்லை. இப்போது பல பெண்களும், புதிய தாய்மார்களும் கூட 8 மணி நேரம் வேலை செய்ய தொடங்கியுள்ளனர்.எனக்கு அதில் விருப்பமில்லை..... 'கல்கி 2898AD - 2' படத்திலிருந்து விலகியது குறித்து தீபிகா படுகோன்! ஆனால் அது ஒருபோதும் தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதில்லை. நானும் என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற சவால்களை எதிர்கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை, என் வழியில் வரும் எதையும் நாம் சமாளிக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் என்னுடைய போராட்டங்களை அமைதியாக நடத்தி இருக்கிறேன். அந்தப் போராட்டங்கள் சில நேரங்களில் பகிரங்கமாகிவிடும். நான் வளர்க்கப்பட்ட விதம் அப்படி இல்லை. ஆனால் அவற்றை அமைதியாகவும் கண்ணியமாகவும் எதிர்கொள்வதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ