விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரை உலகில் அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் கடைசியாக ‘கிங்டம்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர் VD 14 எனும் தலைப்பிடப்படாத புதிய திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா புதிய படம் ஒன்றிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
அதன்படி இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார். இதில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து ‘மகாநதி’ திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் ஜோடியாக நடித்ததில்லை. தற்போது முதன் முறையாக புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
A Wild Beginning.. 🔥
LOVE – RAGE – BLOOD ❤️🔥The most anticipated @TheDeverakonda x @storytellerkola‘s #SVC59 has began today with an auspicious Pooja Ceremony.#VDKolaMassThaandavam Begins.. 💥@KeerthyOfficial #AnendCChandran@DinoShankar @PraveenRaja_Off @SVC_official pic.twitter.com/LkTb6lsliK
— Sri Venkateswara Creations (@SVC_official) October 11, 2025
இப்படத்தின் பூஜை இன்று (அக்டோபர் 11) நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா முறுக்கு மீசையில் காணப்படுகிறார். எனவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, இந்த லுக்கில் தான் நடிப்பார் போல் தெரிகிறது. இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ‘உப்பு காப்புரம்பு’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இது தவிர கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் மிஸ்கினுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


