Homeசெய்திகள்உலகம்16 செ.மீ. மழைக்கே தத்தளிக்கும் துபாய்!

16 செ.மீ. மழைக்கே தத்தளிக்கும் துபாய்!

-

- Advertisement -

 

16 செ.மீ. மழைக்கே தத்தளிக்கும் துபாய்!

we-r-hiring

வரலாறு காணாத அளவு அதிகப்படியான மழைப்பொழிவால் துபாய் நகரம் வெள்ளக்காடானது. கடந்த 24 மணி நேரத்தில் துபாயில் 16 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கடும் மழைப்பொழிவால் துபாய் விமான நிலையம் பகுதியளவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…

கடந்த 1999- ஆம் ஆண்டுக்கு பின் அதிக மழைப்பொழிவால் துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை- துபாயில் விமான சேவை பாதிப்பு!

துபாயில் கனமழை மற்றும் ஷார்ஜாவில் மோசமான வானிலை காரணமாக 6 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் ரத்தானதால் 750- க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விஜய்குமார் நடிக்கும் எலக்சன்… முதல் பாடல் ரிலீஸ்…

அதேபோல், பக்ரைனில் இருந்து சென்னை வரும் கலப் ஏர்வேஸ் உட்பட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 60 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. கனமழை பாதிப்பால் சென்னையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 20 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை சரியானதும் துபாய், ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ