spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்... நாளை மறுவெளியீடு...

மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…

-

- Advertisement -
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராவணன் திரைப்படம் நாளை மறுவெளியீடு செய்யப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னத்தை தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் என்றே சொல்லாம். பிரம்மாண்டம், ஆக்‌ஷன், அதிரடி, காமெடி என இல்லாமல் வழக்கமான பாதைகளை தகர்த்தெறிந்து புதியதொரு பாதை தொடங்கி அதில் இன்று வரை வெற்றிகரமாக பயணிக்கும் ஒரு வெற்றி இயக்குநர் மணிரத்னம். காதலை காவியமாக காட்டுவதில் மணிக்கு இணை மணியே. இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், விக்ரம், துல்கர் சல்மான், சூர்யா என பலர் நடித்துள்ளனர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் பலதரப்பட்ட மக்களின் விருப்ப படமாக இன்று வரை உள்ளது. அதில், தளபதி, இருவர் ஆகியவரை தமிழ் சினிமாவின் அடையாளங்கள்.

we-r-hiring
அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராவணன். இதில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், பிரியாமணி, பிரபு ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் மட்டுமில்லாமல், படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டாக அமைந்தன. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில், ராவணன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இப்படம் வெளியாக உள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அண்மைக் காலமாக, ஹிட் படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ரி ரிலீஸ் செய்யப்படுகின்றன.

MUST READ