Homeசெய்திகள்உலகம்டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!

டிரம்பை கிண்டல் செய்த ஈரான்.. பாலையா பட காட்சியை வெளியிட்டு கொடுத்த பதிலடி!

-

- Advertisement -

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் தரப்பு தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் திரைப்பட காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது.

we-r-hiring

பாலகிருஷ்ணா பட காட்சியை வெளியிட்ட ஈரான் தூதரகம்

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் 58 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்த வீடியோ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியான ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அதிரடி சண்டைக் காட்சியாகும். அந்த காட்சியில் பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரம் ஆயுதம் ஏந்திய பலரை எதிர்கொள்கிறது.

“ஈரான் பாதுகாப்பற்ற நாடு அல்ல”

வீடியோவை வெளியிட்ட ஈரான் தூதரகம், டிரம்பின் ஈரானை அழித்துவிடுவோம் என்ற பேச்சை குறிப்பிட்டு, ஈரான் பாதுகாப்பற்ற நாடு அல்ல என்ற கருத்தை தெரிவித்துள்ளது.

மேலும், ஹாலிவுட்டுக்கு பதிலாக பாலிவுட் படங்களை பார்த்து வருவதாகவும் அந்த பதிவில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டிரம்பின் எச்சரிக்கைக்கு சினிமா காட்சியை பயன்படுத்தி பதிலளித்துள்ளது.

பாலிவுட் இல்லை.. டோலிவுட்!

ஈரான் தூதரகத்தின் பதிவில் அந்த திரைப்படம் ‘பாலிவுட்’ திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ‘பகவந்த் கேசரி’ இந்தி திரைப்படம் அல்ல; அது தெலுங்கு மொழியில் உருவான திரைப்படமாகும்.

இதனால் சமூக வலைதளங்களில் பலரும், அந்த திரைப்படம் பாலிவுட்டைச் சேர்ந்தது அல்ல என்றும், டோலிவுட் திரைப்படம் என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

டிரம்பின் ஈரான் எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரானுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

ஈரான் தொடர்பாக அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஈரான் தூதரகத்தின் இந்த சமூக வலைதள பதிவு வெளியாகியுள்ளது.

வைரலாகும் பாலையா காட்சி

ஈரான் தூதரகத்தின் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணாவின் சண்டைக் காட்சி சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஒரு சர்வதேச அரசியல் விவகாரத்திற்கு தெலுங்கு சினிமாவின் பிரபலமான அதிரடி காட்சியை ஈரான் தரப்பு பயன்படுத்தியிருப்பது இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏ.ஐ.? – ஐ.நா.வில் OpenAI, Anthropic தலைவர்கள் பேச்சு!

MUST READ