spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்"இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்"- கூகுள் கணிப்பு!

“இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்”- கூகுள் கணிப்பு!

-

- Advertisement -

 

"இந்தியாவின் இணையப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சிக் காணும்"- கூகுள் கணிப்பு!
File Photo

இந்தியாவின் இணையப் பொருளாதாரம் வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என கூகுள் கணித்துள்ளது.

we-r-hiring

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

கூகுள் நிறுவனமும், டெமாசெக் மற்றும் பைன் நிறுவனங்கள் இணைந்து ஆய்வை மேற்கொண்ட நிலையில், அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2022- ஆம் ஆண்டில் இணைய பொருளாதாரம் 14.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோருக்கு இணைய வர்த்தகம், ஆன்லைன் மீடியா தளங்கள், ஓடிடி தளங்களுக்கு மென்பொருள் சேவை வழங்குவோரால், இணைய பொருளாதார வளர்ச்சி மேலோங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இணையப் பொருளாதாரத்துடன் மென்பொருள் சேவைத் துறையும் கணிசமான வளர்ச்சிக் காணும் எனவும் கூறப்பட்டுள்ளது.

‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக் காரணமாக, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ