Homeசெய்திகள்இந்தியா'பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

-

 

பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Photo: PIB

டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜூன் 07) காலை 11.00 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மால் சீதாராமன், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மால் சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

ஆம்புலன்சில் எரித்து கொல்லப்பட்ட தாய், மகன்

அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, மத்திய அரசின் நலத்திட்டங்களின் நிலை உள்ளிட்டவைக் குறித்து மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும், மழைக்காலக் கூட்டத்தொடரை நடத்துவது? புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் உள்ள நேஷ்னல் மீடியா சென்டரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “நெல், உளுந்து, துவரம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்டப் பயிர்களுக்கான குறைந்தபட்சக் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சூரிய காந்தி விலை, நிலக்கடலை, பாசிப்பயிர், பருத்தி, கரும்பு, சோயா பீன்ஸ் உள்ளிட்டப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, சோயா பீன்ஸுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 2,560- லிருந்து ரூபாய் 4,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூபாய் 3,750- லிருந்து ரூபாய் 6,620 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!

கேழ்வரகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 1,550- லிருந்து ரூபாய் 3,846 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 1,310- லிருந்து ரூபாய் 2,090 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 4,350- லிருந்து ரூபாய் 7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூபாய் 89,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ