வாஷிங்டன்: உலக வல்லரசாகக் கோலோச்சும் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தாக்குதலுக்குப் பயந்து உணவு வண்டியின் ஓட்டை வழியாக ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் தப்பியோடியதாக வெளிவந்திருக்கும் செய்திகள் சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி, அமெரிக்காவை மிரட்டி அடிபணிய வைக்கும் இந்த மோசமான அரசியல் நாடகத்தின் பின்னணி தற்போது பகிரங்கமாக அம்பலப்பட்டுள்ளது.


மேற்கத்திய ஊடகங்களின் மலிவான பொய் மூட்டை!
அமெரிக்காவின் முக்கியப் பத்திரிகைகள் புனையப்பட்ட ஒரு கதையை வெளியிட்டுவிட்டு, அதை வைத்து உலக ஊடகங்களும் நம் நாட்டு ஊடகங்களும் எந்தவிதத் யோசனையும் இன்றி ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று முழங்கி வருகின்றன. ட்ரம்பை ஒரு கோமாளியைப் போலவும், சாக்கடை மற்றும் உணவு வண்டிகளின் வழியாக அவர் தப்பி ஓடியதாகவும் சித்தரிக்கும் இந்தக் கதைகள், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பையும் உலக அரங்கில் கேலிக்கூத்தாக்கியுள்ளது.
ஏர்போர்ஸ் ஒன் விமானம் வெறும் பொம்மையா?
பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில், எதிரிகளின் ஏவுகணைகளைத் தாங்கும் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க அதிபரின் ‘ஏர்போர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்தின் பாதுகாப்புத் தரம் என்னவாயிற்று? ஒரு சாதாரணக் கையடக்க ராக்கெட் தாக்குதலுக்குப் பயந்து, உலகத்தின் அதிபரே ஓட்டை வழியாகத் தப்பி ஓட வேண்டிய அவலம் நேர்ந்தது என்றால், இதுவரை புனையப்பட்ட அத்தனை பாதுகாப்புப் பெருமைகளும் வெறும் புளுகுமூட்டைகள் என்பது நிரூபணமாகிவிட்டதா?
இஸ்ரேலின் சதி வலையில் சிக்கிய அமெரிக்கா!
இந்த அதிர்ச்சிகரமான தகவலை அமெரிக்காவின் உளவு அமைப்புகளான சிஐஏ (CIA) அல்லது எஃப்பிஐ (FBI) கண்டுபிடிக்கவில்லை மாறாக, இஸ்ரேலின் ‘மொசாத்’ அமைப்புதான் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து ட்ரம்பைத் காப்பாற்றியதாகக் கூறப்படுவதுதான் இங்குள்ள மிகப்பெரிய சந்தேகம். இதன் பின்னணியில் இஸ்ரேலின் ஆபத்தான இரண்டு வியூகங்கள் மறைந்துள்ளன.
ஈரான் உங்களைக் கொல்லத் துடிக்கிறது என்ற பீதியை ட்ரம்பின் மனதில் ஆழமாக விதைத்து, அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது முதன்மை வியூகமாகும். மேலும், ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என்ற ஒரு சூழலைச் செயற்கையாக உருவாக்கிக் கொடுத்து, அமெரிக்கப் படைகளை ஈரானுக்கு எதிராகத் திசைதிருப்பிப் போரை மூட்டுவதும் இதன் பின்னணியில் உள்ளது.
ஒரு வல்லரசின் அதிபரைச் சிறிய தாக்குதல் பயத்தைக் காட்டி ஓடச் செய்ததாகக் கூறுவது, அமெரிக்காவின் இறையாண்மைக்கும் சுயமரியாதைக்கும் விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகும். வரவிருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் ஈரான் மீது அமெரிக்காவின் நேரடித் தாக்குதலைத் தொடுப்பதற்கான கோரமான சூழ்ச்சிகளே இந்தத் தப்பித்தல் நாடகங்களின் பின்னணியில் அரங்கேறி வருகின்றன. வெறும் ஊடகப் பரப்புரைகளை நம்பி ஏமாறாமல், இந்த உலகப் பேரழிவின் பின்னணியில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுச் சதித்திட்டங்களை உலகம் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நிதர்சனமான எச்சரிக்கையாகும்.
