Homeசெய்திகள்உலகம்ஆப்பிள் நிறுவன சிஇஓ ஆகிறார் ஜான் டெர்னஸ்

ஆப்பிள் நிறுவன சிஇஓ ஆகிறார் ஜான் டெர்னஸ்

-

- Advertisement -

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஜான் டெர்னஸ் (John Ternus) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவன சிஇஓ ஆகிறார் ஜான் டெர்னஸ்

ஆப்பிள் நிறுவனத்தில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் செப்டம்பர் 1 முதல் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார்.

we-r-hiring

கடந்த 15 ஆண்டுகளாக டிம் குக் தலைமையில் ஆப்பிள் நிறுவனம் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மாற்றத்தின் ஒரு பகுதியாக, டிம் குக் தொடர்ந்து நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் டெர்னஸ், ஆப்பிள் நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணைத் தலைவராக உள்ளார். ஐபோன், ஐபேட், வாட்ச் போன்ற முக்கிய தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்த மாற்றம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும் என தொழில்நுட்ப வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை உயர்வு; பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்

MUST READ