Homeசெய்திகள்உலகம்நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

-

- Advertisement -

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு, ஏப்ரல் 10, 2026 அன்று பசிபிக் கடலில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…இந்த மிஷனில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.

​ரீட் வைஸ்மேன் (Reid Wiseman): இந்தத் திட்டத்தின் தளபதி (Commander).

we-r-hiring

​விக்டர் குளோவர் (Victor Glover): நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் கறுப்பின வீரர்.

​கிறிஸ்டினா கோக் (Christina Koch): நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் பெண் விண்வெளி வீரர்.

​ஜெர்மி ஹேன்சன் (Jeremy Hansen): நிலவுப் பயணத்தில் பங்கேற்ற முதல் கனடா நாட்டு விண்வெளி வீரர்.

​பயணத்தின் முக்கிய அம்சங்கள்:

​ஏப்ரல் 1, 2026 அன்று கிளம்பி, 10 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்துவிட்டு ஏப்ரல் 10 அன்று பூமிக்குத் திரும்பினர். பூமியில் இருந்து சுமார் 4,06,778 கி.மீ தொலைவு வரை பயணித்தனர். இது 1970-ல் ‘அப்பல்லோ 13’ படைத்த சாதனையை விட அதிகம். இவா்கள் அனைவரும் நிலவில் தரை இறங்கவில்லை. ஆனால், நிலவைச் சுற்றி வந்து (Lunar Flyby), விண்கலத்தின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைச் சோதித்தனர். ​இந்த வெற்றியின் மூலம், அடுத்து வரும் ‘ஆர்டெமிஸ்-3’ திட்டத்தில் மனிதர்களை நிலவில் தரை இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

​”இது வெறும் பயணத்தின் முடிவு அல்ல, மனிதகுலம் நிலவில் தளம் அமைத்து ஆய்வு செய்யப்போகும் ஒரு புதிய யுகத்தின் தொடக்கம்” என்று நாசா இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது.

பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்

 

MUST READ