Homeசெய்திகள்உலகம்ஒரே மேடையில் 115 புத்தகங்கள் வெளியீடு – உலக சாதனை படைத்த கவிஞரும் பாடலாசிரியருமான விவேகா!

ஒரே மேடையில் 115 புத்தகங்கள் வெளியீடு – உலக சாதனை படைத்த கவிஞரும் பாடலாசிரியருமான விவேகா!

-

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா ஒரே நேரத்தில் 115 புத்தகங்களை வெளியிட்டு உலக சாதனை படைத்துள்ளார்.ஒரே மேடையில் 115 புத்தகங்கள் வெளியீடு – உலக சாதனை படைத்த கவிஞரும் பாடலாசிரியருமான விவேகா!

கற்றல் பதிப்பகம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த நூல்கள் தமிழ், அரபி, பிரெஞ்சு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளன. தமிழ் இலக்கிய உலகில் இந்த நிகழ்வு கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த 14-ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பல மொழிப் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இதன் ஒரு பகுதியாக, புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கெனப் பிரத்யேக கலையரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.ஒரே மேடையில் 115 புத்தகங்கள் வெளியீடு – உலக சாதனை படைத்த கவிஞரும் பாடலாசிரியருமான விவேகா!

அந்த அரங்கில் கற்றல் கல்வி மையத்தின் நிறுவனரும் கல்வியாளருமான ஸ்ரீ ரோகிணி தலைமையில், கற்றல் பதிப்பகம் பதிப்பித்த 115 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான விவேகா, ஒரே தருணத்தில் 115 புத்தகங்களையும் வெளியிட்டு, எழுத்தாளர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ், அரபி, பிரெஞ்சு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில், 115 எழுத்தாளர்களின் 115 நூல்கள் ஒரே மேடையில் வெளியிடப்பட்டது இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. ஒரே நிகழ்வில் இத்தனை நூல்கள் வெளியிடப்பட்டிருப்பது உலக சாதனை எனப் பன்மொழி அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில், 12 வயதுக்குள் ஐந்து மொழிகளில் நூல்களை எழுதிய காதம்பரி என்ற சிறுமியும் மேடையில் கவுரவிக்கப்பட்டார். இளம் வயதிலேயே பன்மொழிகளில் எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள அவருக்கு நிகழ்ச்சியில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சி பெற வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஷார்ஜாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், உயரதிகாரிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

ஒரே மேடையில் ஐந்து மொழிகளைச் சேர்ந்த 115 எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்ட இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் தமிழ் இலக்கியம் மற்றும் பன்மொழி எழுத்துப் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள் அல்லது பணியை விடுங்கள்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஐபிஎம் நிறுவனம் அறிவிப்பு

MUST READ