Homeசெய்திகள்உலகம்"அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!": ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு...

“அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!”: ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!

-

- Advertisement -

மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வியடைந்து ஈரான் வெற்றி பெற்றுள்ளதாக மக்கள் அதிகார கழகத்தின் வழக்கறிஞர் மருது தெரிவித்துள்ளார்."அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!": ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!

அமெரிக்காவின் திட்டம் தோல்வி
“ஈரானின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும், அதன் ராணுவ மற்றும் பொருளாதார இறையாண்மையைச் சீர்குலைத்து அமெரிக்காவிற்கு அடிமையாக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாகும். ஆறு வாரங்களில் ஈரானை ஒழித்துக்கட்டி விடலாம் என அமெரிக்கா எண்ணியது.

we-r-hiring

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ராணுவக் கட்டமைப்புகள் சேதமடைந்த போதிலும், ஈரானிய அரசு கவிழவில்லை. ஈரானில் ஏற்பட்டிருந்த உள்நாட்டுக் குழப்பங்கள் முடிவுக்கு வந்து, மக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக ஒன்று திரண்டுள்ளனர். இதனால், வேறு வழியின்றி நிலவுகின்ற ஈரானிய அரசை அங்கீகரித்து, அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேஜையில் அமர வேண்டிய சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்தப் போரில் அமெரிக்கா தோல்வியடைந்து, ஈரான் வெற்றி பெற்றுள்ளது."அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!": ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!

நீரிணைகளில் உருவான நெருக்கடி
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட முயன்ற பிறகே, ஈரான் தனது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்திப் பிடியை இறுக்கியது. இதனால் எழுந்த நெருக்கடியைத் தவிர்க்க, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பாப்-எல்-மாண்டெப் (Bab-el-Mandeb) நீரிணை வழியிலான மாற்றுப் பாதையைப் பயன்படுத்தத் தொடங்கின.

ஆனால், அங்குமிடையே அமெரிக்காவின் தூண்டுதலால் ஏமன் பகுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாப்-எல்-மாண்டெப் நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் மாற்று வழியும் அடைபட்டு, உலகளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது."அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!": ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!

டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள்
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மறைக்கவும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவுமே இந்தப் போர் முன்னெடுக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மாஸ்க் ஆகியோரின் பாசிச கும்பல், சொந்த லாபத்திற்காகவே இத்தகைய உலகளாவிய போர்களை ஊக்குவிக்கிறது. போர் நிறுத்தம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களைப் முன்கூட்டியே பயன்படுத்தி, கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மூலமாகப் பில்லியன் கணக்கில் முதலீடுகளைப் பெற்று டிரம்ப் நிதி திரட்டுவதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் ஆய்வு வெளியிட்டுள்ளது."அந்த ஒரு அறிவிப்பால் மாறிய ஆட்டம்!": ஈரானை ஒன்றும் செய்ய முடியாமல் திணறும் அமெரிக்கா! போட்டு உடைத்த வழக்கறிஞர் மருது!

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வீழ்ச்சி
ஈரான் நமக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கத் தயாராக இருந்தபோதிலும், அமெரிக்காவிற்குப் பயந்துகொண்டு இந்திய அரசு ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொண்டது. கடந்த 70-80 ஆண்டுகளாக உருவாக்கி வைக்கப்பட்டிருந்த வெளியுறவுக் கொள்கையை மோடி அரசு சிதைத்து, அமெரிக்காவிற்கு அடிமையாகச் செயல்படுகிறது. இதன் விளைவாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை (எல்.பி.ஜி) விலை உயர்ந்து, சாதாரண மக்களும் சாமானிய தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன” என்று வழக்கறிஞர் மருது குற்றம் சாட்டியுள்ளாா்.

அமெரிக்கா–ஈரான் போர் மீண்டும் தீவிரம்! எண்ணெய் விலை $90-ஐ தாண்டியது – இந்தியாவுக்கு அடுத்த அதிர்ச்சி?

MUST READ