அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு விதித்துள்ள புதிய வர்த்தக கூட்டாளி நாடுகள் மீதான கூடுதல் வரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாகாணங்கள் ஒன்றிணைந்து கூட்டு வழக்கு தொடர்ந்துள்ளன. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மிகப்பெரிய சட்ட போராட்டமாக பார்கப்படுகிறது.


வழக்கின் காரணம் என்ன?
கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வர்தக கூட்டாளி நாடுகள் மீது டிரம்ப் அரசு கூடுதல் “டாரிஃப்” எனப்படும் இறக்குமதி வரிகளை விதித்தது. “அமெரிக்க தொழில்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை” என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இந்த வரி விதிப்பால் தங்கள் மாகாண மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி ஜனநாயக கட்சி ஆளும் 25 மாகாணங்களும் ஒன்றாக சேர்ந்து பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
மாகாணங்களின் குற்றச்சாட்டு
வழக்கு மனுவில், “டிரம்ப் அரசு சட்டத்திற்கு விரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் இந்த வரிகளை வித்துள்ளது. இதனால் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
காய்கறிகள், வாகன உதிரிபாகங்கள், மின்னணு பொருட்கள் விலை உயரும் என்றும், இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் மாகாண அரசுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
வெள்ளை மாளிகையின் பதில்
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், “அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்பை காக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவுமே இந்த வரிகள். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
அடுத்து என்ன?
இந்த வழக்கு வரும் மாதங்களில் விசாரணைக்கு வர உள்ளது. நீதிமன்றம் டிரம்ப் அரசுக்கு ஆதரவாக தீர்பு வழங்கினால் வரி அப்படியே நீடிக்கும். மாகாணங்களுக்கு ஆதரவாக தீர்பு வந்தால் புதிய வரிகள் ரத்து செய்யப்படலாம். அமெரிக்க-உலக வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வழக்கின் முடிவை உலக நாடுகளும் உற்றுநோக்கி வருகின்றன.
