Homeசெய்திகள்உலகம்ஒரே ஒரு தாக்குதல்.. முடங்கப்போகும் உலகப் பொருளாதாரம்! ஈரான் கையில் எடுத்த 'எண்ணெய்' ஆயுதம்!

ஒரே ஒரு தாக்குதல்.. முடங்கப்போகும் உலகப் பொருளாதாரம்! ஈரான் கையில் எடுத்த ‘எண்ணெய்’ ஆயுதம்!

-

- Advertisement -

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஒட்டுமொத்த எரிசக்தி மையங்களும் தரைமட்டம்: உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்!ஒரே ஒரு தாக்குதல்.. முடங்கப்போகும் உலகப் பொருளாதாரம்! ஈரான் கையில் எடுத்த 'எண்ணெய்' ஆயுதம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஒட்டுமொத்த எரிசக்தி மையங்களையும் குறிவைத்து ஈரான் விடுத்துள்ள புதிய எச்சரிக்கை உலக நாடுகளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அறிவித்துள்ள இந்த அச்சுறுத்தல் வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடாமல் செயல் வடிவம் பெற்றால், உலகப் பொருளாதாரம் முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

போர் வெடிப்பின் பின்னணியும் பதற்றமும்
அமெரிக்கா – ஈரான் இடையே நிலவி வரும் தீவிர மோதல் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே சர்வதேசச் சந்தையில் எரிவாயு பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தமும் நீடிக்கவில்லை.  இதற்கிடையே, ஈரானின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கான மிகக் கடுமையான பதிலடியாகவே ஈரான் இந்த அதிரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரே ஒரு தாக்குதல்.. முடங்கப்போகும் உலகப் பொருளாதாரம்! ஈரான் கையில் எடுத்த 'எண்ணெய்' ஆயுதம்!

ஈரானின் நேரடி எச்சரிக்கைப் பட்டியல்
அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தங்கள் நாட்டின் மீது மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடுத்தால், மத்திய கிழக்கில் உள்ள மிக முக்கிய எண்ணெய் வயல்களைத் தரைமட்டமாக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் தாக்குதல் இலக்குகளின் பட்டியலில்,

  • சவுதி அரேபியா: உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் வயலான கவார் (Ghawar) மற்றும் அப்கைக் குரைஸ் (Abqaiq-Khurais) சுத்திகரிப்பு ஆலைகள்.
  • ஐக்கிய அரபு அமீரகம் (UAE): ஜாகும் எண்ணெய் வயல் மற்றும் ருவைஸ் சுத்திகரிப்பு நிலையம்.
  • இதர நாடுகள்: கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய எரிசக்தி வளங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள்.

இந்தியப் பொருளாதாரத்திற்குக் காத்திருக்கும் ஆபத்து
ஈரானின் இந்த அதிரடித் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அது இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு மிகக் கடுமையாக அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்திப்பதுடன், தங்கம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாடுகளின் ராஜதந்திர முயற்சிகளை மீறி ஈரான் எடுத்துள்ள இந்த அதிரடி நிலைப்பாடு, உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் சர்வதேச அரசியலிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை ரத்து செய்தார் டொனால்ட் டிரம்ப்: ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் குறித்து தீவிரப் பேச்சுவார்த்தை!

MUST READ