சமூக வலைதளங்கள் மூலம் திட்டம்: சியுடா நகருக்குள் திரண்டதால் ஐரோப்பாவில் பாதுகாப்புப் பதற்றம்!
ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள வட ஆப்பிரிக்க நகரமான சியுடாவிற்குள் (Ceuta) வெறும் இரண்டு நாட்களில் சுமார் 60,000 அகதிகள் அனுமதியின்றி நுழைந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டிலிருந்து கடல் வழியாகவும் தரை வழியாகவும் ஒரே நேரத்தில் பாயிந்த இந்த மக்கள் வெள்ளத்தால் ஐரோப்பிய யூனியன் முழுவதிலும் பாதுகாப்பு குறித்த அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.

சமூக வலைதளங்கள் மூலம் பக்காவாக உருவான திட்டம்
மொராக்கோ எல்லையை ஒட்டியுள்ள சியுடா பகுதி, ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையத் துடிக்கும் அகதிகளுக்கு நீண்டகாலமாக முதன்மை நுழைவுவாயிலாக இருந்து வருகிறது. வழக்கமாக கோடைக் காலத்தில் இத்தகைய முயற்சிகள் ஆங்காங்கே நடந்தாலும், இந்த முறை சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிடப்பட்டு பெரும் திரளாக அகதிகள் ஊடுருவியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
- பேஸ்புக் குழுக்களின் பங்கு: நிகழ்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே 1,800 பேர் கடலில் நீந்தி எல்லையைக் கடந்த நிலையில், பலர் நீச்சல் உடைகள் மற்றும் துடுப்புகளை ‘பேஸ்புக்’ குழுக்கள் மூலம் வாங்கியுள்ளனர்.
- வழித்தட வழிகாட்டுதல்: அரபு மொழியில் கடல் அலைகளின் சீற்றம் குறித்தும், கூகுள் மேப் (Google Maps) செயலியைப் பயன்படுத்தி ஆபத்தான தராஜல் (Tarajal) பாறை கடற்கரையை அடைவது எப்படி என்றும் இணையத்தில் விரிவான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
ஆபத்தான கடல் பயணம் – 67 பேர் பரிதாப பலி
மொராக்கோவிலிருந்து சியுடாவை அடையும் நேரடி நீச்சல் பாதை சில நூறு மீட்டர்கள் மட்டுமே என்றாலும், கடுமையான கடல் நீரோட்டம் மற்றும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கடலில் குதித்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அலைகளின் சீற்றத்தில் சிக்கி பல மணி நேரம் போராடியதில் இதுவரை 67 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எல்லையைக் கடந்து சியுடாவிற்குள் நுழைந்த மக்கள், உணவு மற்றும் ஸ்பெயின் நிலப்பரப்பிற்குச் செல்லும் வழியைத் தேடி அகதிகள் வரவேற்பு மையத்தை அடைந்தனர். ஆனால், அங்கு மையம் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்த ஆயிரக்கணக்கானோர் வேறு வழியின்றி மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கேத் திரும்பத் தொடங்கினர்.
“மனித கடத்தல் கும்பல்களின் சதி” – ஸ்பெயின் பிரதமர் குற்றச்சாட்டு
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எல்லைக் கட்டுப்பாடுகள் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) இதற்கு மனித கடத்தல் கும்பல்களே காரணம் எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இது ஸ்பெயினின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று குறிப்பிட்ட அவர், “உரிய நீதித்துறை நடைமுறைகளின்றி அகதிகளை மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற ஜூன் மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, மனித கடத்தல்காரர்கள் தவறாகச் சித்தரித்து அப்பாவி மக்களைத் திசைதிருப்பியுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
ஐரோப்பிய நாடுகளின் எதிர்வினை – ஷெங்கன் ஒப்பந்தம் ரத்து
இந்தக் கட்டுக்கடங்காத அகதிகள் ஊடுருவலைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனின் எல்லைக் கட்டுப்பாடற்ற ‘ஷெங்கன்’ (Schengen) ஒப்பந்தத்தை இத்தாலி நாடு தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் இந்த சுயநலமான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு ஸ்பெயின் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால், அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே புதிய தூதரகப் பிளவு உருவாகியுள்ளது.
“ஒவ்வொரு மகனுக்கும் இதுவே லட்சியக் கனவு!” – இணையத்தைக் கலக்கும் ஏர் இந்தியா விமானியின் வைரல் பயணம்!
