அமெரிக்க – ஈரான் போர்: ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை “அமைதிக்கான அதிபர்” என்று அழைக்கும் பதிவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) இல், தன்னை “அமைதிக்கான அதிபர்” (The Peace President) என்று குறிப்பிடும் பதிவு ஒன்றை மீண்டும் பகிர்ந்துள்ளார். ”ட்ரம்ப் வார் ரூம்” (Trump War Room) கணக்கினால் பகிரப்பட்ட அந்தப் பதிவு, உலகளாவிய ராஜதந்திரத்தில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டும் ஒரு டிஜிட்டல் போஸ்டரைக் கொண்டிருந்தது. மேலும், அதில் “ட்ரம்ப்பை நம்புங்கள். பதற்றமடைபவர்களை அல்ல (Not Panicans)” என்ற செய்தியும் இடம் பெற்றிருந்தது.
சர்வதேச மோதல்களைக் குறைப்பதற்கும் அல்லது கையாள்வதற்கும் தனது நிர்வாகம் உதவியுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் சூழலிலும், ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையிலும் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
விரைவில் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்

