Homeசெய்திகள்உலகம்விரைவில் ஈரான் - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் - டிரம்ப் தகவல்

விரைவில் ஈரான் – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்

-

- Advertisement -

விரைவில் ஈரானுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களிடம் கையிருப்பில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.விரைவில் ஈரான் - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் - டிரம்ப் தகவல்போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியான சூழல் மீண்டும் திரும்ப தாங்கள் விதித்துள்ள பெரும்பாலான நிபந்தனைகளை ஈரான் ஏற்று கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறி இருக்கிறது. பல வாரங்களாக நிலவி வந்த பதட்டமான போர் சூழல் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் மூலம் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிக அருகில்” இருப்பதாகவும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட பாகிஸ்தானுக்குச் செல்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளும் மேலதிகப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தெஹ்ரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைக்க ஒப்பு கொண்டுள்ளதாகவும் கூறினார்.

we-r-hiring

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை தயாரிக்க கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. இதனையொட்டிய எங்களின் பெரும்பாலான நிபந்தனைகளுக்கு ஈரான் தரப்பு கிட்டத்தட்ட முழுமையாக ஒப்பு கொண்டுள்ளனர். எனவே பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்தை எட்டி எல்லாம் சுமுகமாக முடிந்தால் நல்ல மாற்றம் ஏற்படலாம் என்றார் டிரம்ப்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ததில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் பங்களிப்பை டிரம்ப் பாராட்டினார். மீண்டும் பாகிஸ்தானில் நடைபெற வாய்ப்புள்ள இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதித்து வருவதாக வெள்ளை மாளிகையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அமெரிக்கா – ஈரான் இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஒப்படைக்க ஈரான் முன்வந்துள்ளதாக டிரம்ப் கூறி இருக்கும் தகவல் போர் சூழலை முடிவுக்கு கொண்டு வர கூடும்.

”மெலோனி தைரியம் இல்லாதவர் ” என இத்தாலி பிரதமரை சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

MUST READ