spot_imgspot_imgspot_imgspot_img
HomePongal Special’நன்றி சொல்ல வார்த்தையில்ல.. ஒவ்வொரு நொடியும் கடமைப்பட்டுள்ளேன்’ - அஜித்குமார் நெகிழ்ச்சி..!!

’நன்றி சொல்ல வார்த்தையில்ல.. ஒவ்வொரு நொடியும் கடமைப்பட்டுள்ளேன்’ – அஜித்குமார் நெகிழ்ச்சி..!!

-

- Advertisement -
அஜித்குமார்
கார் ரேஸிங்கில் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், பொங்கல் மற்றும் சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் அஜித் குமார், மறுபுறம் ரேஸிங்கிலும் கலக்கி வருகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் ரேசிங்கில் களமிறங்கி இருக்கும் அஜித் குமார், தனது பெயரிலேயே சொந்தமாக ஒரு ரேஸிங் அணியை உருவாக்கினார். இதனையடுத்து முதல்கட்டமாக துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸிங்கில் போட்டியிட்டு 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Image

we-r-hiring

வெற்றிக் களிப்புடன் உற்சாகமாக துள்ளிக்குதித்த அஜித்தை பார்த்த ரசிகர்களுக்கு, பொங்கல் விருந்து சுவைத்தது போன்ற மகிழ்ச்சி கிடைத்தது. இத்தனை ஆண்டுகளில் அஜித்தை இப்படி பார்த்ததே இல்லையே என ரசிகர்களே உணர்ச்சிவசப்பட்டு வருகின்றனர்.

Image

இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

Image

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப்
பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Image

MUST READ