Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வருக்கு நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்!

முதல்வருக்கு நீங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்!

-

- Advertisement -

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு வாழ்த்து சொல்ல திமுக ஐடி விங் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

we-r-hiring

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்களும், தொண்டர்களும் கூட வாழ்த்து சொல்லக்கூடிய விதமாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல 07127 191333 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். முதல்வரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலினுடன் செல்பி எடுக்க ஆசையா? அதற்கும் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. http://selfiewithcm.com என்கிற இந்த வலைதள முகவரியை அணுகினால் முதல்வருடன் Virtual Selfie எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ