spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'டிமான்ட்டி காலனி 2' படத்தின் மூன்றாவது பாடல் இணையத்தில் வெளியீடு!

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் மூன்றாவது பாடல் இணையத்தில் வெளியீடு!

-

- Advertisement -

டிமான்ட்டி காலனி 2 படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.'டிமான்ட்டி காலனி 2' படத்தின் மூன்றாவது பாடல் இணையத்தில் வெளியீடு!

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த நிலையில் பல வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு டிமான்ட்டி காலனி 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து மீனாட்சி சௌந்தராஜன், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன.

we-r-hiring

அதே சமயம் படத்தின் டிரைலரும் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்தது. அடுத்ததாக பட குழுவினர் ரிலீஸ் ட்ரெய்லரையும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இதன் WHY ARE WE WANDERING எனும் மூன்றாவது பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ