விரக்தியில் வெளியேறிய அதிமுக வேட்பாளர்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பின்னடைவை சந்தித்தால், அதிமுக வேட்பாளர் விரக்தியில் வெளியேறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்திருந்தனர். மொத்தம் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை உணவு இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கியது. 4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவந்தபோது, அதிமுக சார்பில் வேட்பாளர் தென்னரசு மட்டுமே மையத்தில் இருந்ததார். ஆனால் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததால் தென்னரசு விரக்தியில் வெளியேறினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறிய தென்னரசு, இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோன்றது என தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகளும் பெற்றுள்ளனர்.