- Advertisement -
கொலம்பியாவில் திடீரென விமான சேவை ரத்து
கொலம்பியாவில் திடீரென குறிப்பிட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

விமான நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு
கொலம்பியாவில் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். அந்நாட்டை சேர்ந்த விவா ஏர் என்ற விமான நிறுவனம் கடுமையான கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தை ஏவியான்சிகா என்ற விமான நிறுவனத்துடன் இணைக்க விவா ஏர் நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது. இதற்கு அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளிக்காததால் விவா ஏர் நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியது.


போராட்டத்தின் போது நடந்த கைகலப்பு
இதனால் கொலம்பியா விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பயணிகளுக்கும், அதிகாரிகளும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை வேறு விமானத்தில் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.


