spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசதீஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்'.... நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி!

சதீஷ் நடிக்கும் ‘சட்டம் என் கையில்’…. நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி!

-

- Advertisement -

சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.சதீஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்'.... நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் விஜய், சிவகார்த்திகேயன், விமல், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதேசமயம் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் ஆகியோரை போல் இவரும் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அதன்படி ஏற்கனவே நாய் சேகர் எனும் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அதைத்தொடர்ந்து கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற ஹாரர் திரில்லர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.சதீஷ் நடிக்கும் 'சட்டம் என் கையில்'.... நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி! மேலும் வித்தைக்காரன் எனும் திரைப்படத்திலும் நடித்து பெயர் பெற்றார் சதீஷ். அடுத்ததாக இவரது நடிப்பில் சட்டம் என் கையில் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சச்சி என்பவர் எழுதியிருக்கிறார். இதனை பி வி ஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ