சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ரேணுகா சாமி என்ற ரசிகரை கடத்தி, கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா மற்றும் தர்ஷனின் நண்பர்கள் உள்ளிட்ட 17 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து, நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், நடிகர் தர்ஷன் சிறையில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிய வீடியோ காட்சி நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி கோப்பை மற்றும் சிகரெட் உடன், நடிகர் தர்ஷன் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தர்ஷனுக்கு சலுகை வழங்கியவர்கள் மிது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிககை விடுத்தனர்.

இந்த நிலையில், நடிகர் தர்ஷனுக்கு சலுகை காட்டிய விவகாரத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
