Homeசெய்திகள்தமிழ்நாடு6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

-

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் வரும் 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும்  6 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் வருகின்ற 20ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு வரும் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

we-r-hiring

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது!

மாநில முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் முதல் பருவத்தேர்வு நடைபெறுவதாகவும், பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பதிவிறக்கம் செய்து, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

MUST READ