Homeசெய்திகள்சினிமாகார்த்தி, அரவிந்த்சாமியின் 'மெய்யழகன்' பட ட்ரெய்லர் வெளியீடு!

கார்த்தி, அரவிந்த்சாமியின் ‘மெய்யழகன்’ பட ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.கார்த்தி, அரவிந்த்சாமியின் 'மெய்யழகன்' பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மெய்யழகன். இந்த படத்தினை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா படத்தின் இசையமைக்கும் பணிகளை கவனித்திருக்கிறார். மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் கார்த்திவுடன் இணைந்து அரவிந்த்சாமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் படத்தின் டீசரையும் டெல்டா கல்யாணம் எனும் பாடலையும் பட குழுவினர் வெளியீட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தனர். அதைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படம் எமோஷனல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ட்ரெய்லரிலும் எமோஷனல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால் மெய்யழகன் திரைப்படம் கார்த்திக்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ