நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் குற்றம் செய்ததை தானே ஒத்துக் கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடன இயக்குனராக அறியப்படுபவர் ஜானி மாஸ்டர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்பட்டது. அதாவது 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் தன்னை 16 வயதிலேயே ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்திய போது ஜானி மாஸ்டர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜான் மாஸ்டர் தலைமறைவாகியிருந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் ஜான் மாஸ்டர் பணி புரிய பிலிம் சேம்பர் தடை விதிக்கப்பட்டது. அதேசமயம் ஆந்திர மாநிலம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்தும் ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார். இவ்வாறு ஜானி மாஸ்டர் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து தெலுங்கானா காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில் புகார் கொடுத்த அந்த இளம் பெண்ணை மைனராக இருக்கும் போதே பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் தானே ஒப்புக் கொண்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.