இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு கடைசியாக விஜய் நடிப்பில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை வெங்கட் பிரபுவும் பல இடங்களில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் என சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படமானது வித்தியாசமான படமாக இருக்கும், சிவகார்த்திகேயனை இதுவரை பார்க்காத கேரக்டரில் பார்க்க முடியும் என்பது போன்ற தகவல்களை வெங்கட் பிரபு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஷூட்டிங் குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.
#VenkatPrabhu Recent
– I’m currently in the pre-production stage of my next film with #Sivakarthikeyan.
– We plan to begin shooting in December or January.
– It’s going to be a unique project.#Parasakthipic.twitter.com/kdSNzzQj61— Movie Tamil (@_MovieTamil) October 10, 2025
சிவகார்த்திகேயனை வைத்து அடுத்ததாக தான் இயக்கப்போகும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருப்பதாகவும், 2025 டிசம்பர் அல்லது 2026 ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும், இந்த படமானது வித்தியாசமான படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


