ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜயின் 69 ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் கசிந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களையும், முன்னோட்ட வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தனர். இதன் முதல் பாடல் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடைந்துவிட்டதாம். அடுத்தது படமானது சென்சாருக்கு தயாராகி வருகிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூரில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளையும், அதிர்வலையையும் ஏற்படுத்திய நிலையில் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சொன்னபடி ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தகவல் நிச்சயம் இப்படம் 2026 ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் வெளிவரும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.