நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை சேகரித்தார். அடுத்தது பார்க்கிங் திரைப்படமும், லப்பர் பந்து திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் டீசல் திரைப்படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்க திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் – திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் நிறைவடைந்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நடந்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நானும், பிரதீப் ரங்கநாதனும் நல்ல நண்பர்கள். பிரதீப் என்னுடைய லப்பர் பந்து படத்தை பார்த்துவிட்டு என் நடிப்பை பாராட்டினார்.
மேலும் கோமாளி படத்திற்கு முன்பாக பிரதீப் ரங்கநாதன் எனக்கு ஒரு கதை சொன்னார். ஆனால் அந்தப் படத்தை எங்களால் பண்ண முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் டியூட் திரைப்படமும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தான் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.