அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான பாம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதைத்தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ‘ஒன்ஸ் மோர்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் பாம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் காளி வெங்கட், சிவாத்மிகா, நாசர், அபிராமி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜெம்ரியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி வெளியானது. அதாவது இந்த படத்தில் அர்ஜுன் தாஸை இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் பார்க்க முடிந்தது. காளி வெங்கட்டும் வழக்கம் போல் சிறப்பாக நடித்திருந்தார். இவ்வாறு இந்த படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்ற நிலையில் நாளை (அக்டோபர் 10) இந்த படமானது ஷார்ட் ப்ளிக்ஸ், ஆஹா தமிழ், ப்ரைம் வீடியோ, பிளாக் ஷீப், ப்ரியோ ஓடிடி, சிம்ப்ளி சௌத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.