பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த நிலையில் இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் டியூட் படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். சாய் அபியங்கர் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், நிகேத் பொம்மி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து மமிதா பைஜூ, சரத்குமார், ஹிரிது ஹரூன், ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தற்போது படக்குழு டிரைலர்யும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த டிரைலரை பார்க்கும்போது இப்படம் ‘லவ் டுடே’ படம் போல் ஜாலியான என்டர்டெயினர் படமாக இருக்கும் போல் தெரிகிறது. பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல் புல் எனர்ஜியுடன் நடித்துள்ளார். டிரைலரில் காதல், காமெடி, எமோஷன், ஆக்ஷன் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.