Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த 'லப்பர் பந்து' படக்குழு!

இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த ‘லப்பர் பந்து’ படக்குழு!

-

- Advertisement -

லப்பர் பந்து படக்குழுவினர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த 'லப்பர் பந்து' படக்குழு!

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருந்தார். அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தது. இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த 'லப்பர் பந்து' படக்குழு!கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அதேசமயம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த படத்தில் மறைந்த நடிகரும் அரசியல் அதிகமான கேப்டன் விஜயகாந்தின் குறியீடுகள் பல இடங்களில் காட்டப்பட்டிருந்தது. அதிலும் கேப்டனின் தீவிர ரசிகனாக நடித்திருந்த அட்டக்கத்தி தினேஷுக்கு பில்டப் கொடுக்கும் பாடலாக விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் ஒலிக்கப்பட்டது.இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த 'லப்பர் பந்து' படக்குழு! இந்த பாடல் ஒலிக்கும் இடங்களில் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். எனவே இந்த பாடலுக்கு இசை அமைத்திருந்த இசை ஞானி இளையராஜாவை, ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ