spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்...

ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -

ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஹிஜாவு நிதி நிறுவனம், கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.4,620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்தது. இது தொடர்பாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் 15 பேர் தலைமறைவாக உள்ளனர்.

we-r-hiring

இந்த நிலையில் ஹிஜாவு வழக்கில் சிறையில் உள்ள அந்நிறுவன முக்கிய நிர்வாகிகள் ரவிசந்திரன், ஜெயக்குமார், சுரேஷ், துரைராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் ரூ.4620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாகவும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 21 பேர் கைது
high court

மேலும் மனுதரார்களுக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்றும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு வழங்கிய ஜாமினை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்கு கூட இதுவரை மீட்கவில்லை என்றும், முக்கிய குற்றவாளி அலெக்ஸாண்டர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடைவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெரிவித்துள்ளதாகவும், எனவே அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி தனபால், 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

MUST READ