கோயிலுக்குள் குழந்தையை கடத்தி பிரேஸ்லெட், மோதிரத்தை கழட்டிக்கொண்டு தப்பி சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பெண் ஒருவர் தூக்கிச் சென்று குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லேட் , மோதிரத்தை கழற்றிக்கொண்டு பயபக்தியுடன் கோவிலை சுற்றி வரும்
பெண்ணை சிசிடிவி காட்சி காட்டிக்கொடுத்து விட்டது.
திருவள்ளூரில்
பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் வைணவத்தலமாக விளங்கும் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில் நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்த நிலையில் கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்துள்ளார்.
அந்த குழந்தை அங்கும் இங்குமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தையின் தாய் மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தை அங்கிருந்து சிறிது தூரம் ஓடி நின்றுள்ளது.
இதை அடுத்து அக்குழந்தையை கையில் பிளாஸ்டிக் பை வைத்துக் கொண்டு வந்த மர்ம பெண் ஒருவர் அக்குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே நுழைவாயிலில் இறக்கிவிட்டு குழந்தை கையில் அணிந்திருந்த மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவற்றை கழற்றிக்கொண்டு குழந்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.
இதை அடுத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என பதறிய தாய் சிறிது நேரத்தில் மற்றொரு பெண் குழந்தை உள்ளே விளையாடிக் கொண்டு இருப்பதால் யாருடையதன தெரியாமல் தூக்கிக்கொண்டு வெளியே வந்து பொதுமக்களிடம் கேட்டபோது குழந்தையின் தாய் குழந்தையை பெற்றுக் கொண்டு கையில் இருந்த மோதிரம் பிரேஸ்லெட் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்ததன் அடிப்படையில் கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்மப் பெண் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே இறக்கிவிட்டு கையில் இருந்த நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது.மேலும் குழந்தையிடம் நகைகளை கொள்ளை அடித்து விட்டு பயபக்தியுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.