spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கங்குவா' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகாது..... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு!

‘கங்குவா’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகாது….. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு!

-

- Advertisement -

கங்குவா திரைப்படம் ஐமேக்ஸ் வெர்ஷனில் வெளியாகாது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளார்.'கங்குவா' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகாது..... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு!

சூர்யாவின் 42வது திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படம் மிகப்பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. அந்த வகையில் 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா, பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.'கங்குவா' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகாது..... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு! இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறியதாவது, “இன்னும் ஓரிரு நாட்களில் கங்குவா படம் தொடர்பான அடுத்த அப்டேட் வெளியாகும். சிறப்பான ப்ரோமோஷன் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இயக்குனர் சிறுத்தை சிவா, சூர்யாவிற்காக பயங்கரமான டைட்டில் கார்டை கிரியேட் செய்துள்ளார். படத்திலிருந்து நிகழ்கால போர்ஷன் வரவிருக்கும் ட்ரையலரில் வெளியிடப்படும். 'கங்குவா' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகாது..... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவிப்பு!சூர்யாவின் குரல் அனைத்து மொழிகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 3500 திரைகளில் திரையிடப்பட தயாராகி வருகிறது. ஒரு பாடல் மட்டும் 3D மாற்றத்திற்காக பெண்டிங்கில் இருக்கிறது. மேலும் இந்த படம் ஐமேக்ஸ் வெர்ஷனில் வெளிவராது” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. இருப்பினும் படத்தினை காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ