spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகூகுள் மேப்பால் சதுப்பு நில சேற்றில் பைக்குடன் சிக்கிய உணவு டெலிவரி ஊழியர்

கூகுள் மேப்பால் சதுப்பு நில சேற்றில் பைக்குடன் சிக்கிய உணவு டெலிவரி ஊழியர்

-

- Advertisement -

கூகுள் மேப்பால் சதுப்பு நில சேற்றில் பைக்குடன் சிக்கிய உணவு டெலிவரி ஊழியர்சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அக்.17 ஆம் தேதி அன்று இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டிருக்கிறார்.

உணவு டெலிவரி செய்யும் இடத்திற்கு செல்ல செல்போனில் “கூகுல் மேப்” பார்த்தபடி சென்றிருக்கிறார். இருள் சூழ்ந்திருந்த பகுதியை மேப் காட்டியதால், அவசரமாக சென்ற பவுன்ராஜ் அங்குள்ள சதுப்பு நில சேற்றில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கி கொண்டு அதிலிருந்து மீள முடியாததால் கூச்சலிட்டுள்ளார்.அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பரிதவித்த அவர் 112 என்ற கட்டுப்பட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டு அவரது செல்போனில் இருந்து இருப்பிட லொகேஷன் அனுப்பியுள்ளார்.

we-r-hiring

பின்னர் உடனே துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டிருந்த பவுன்ராஜயும் அவரது மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

MUST READ