உங்கள் அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?

சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் பெருகி வருகின்றன. பல்வேறு நூதன முறைகளில் சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் சைபர் குற்றத்தின் மிகவும் பொதுவான வடிவம் நிதி மோசடி ஆகும். இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறதா? என்று கேட்டால் , அது மிகவும் குறைவாகவே உள்ளது.
கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி, மும்பை போலீஸ் பேசுவதாகக் கூறி, சென்னையில் வசித்து வரும் ஓய்வுபெற்ற டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் ரூ.90 ஆயிரம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாதிரி நாள்ளொன்றுக்கு மூன்றாம் தரப்பு ஆபத்து அதிகரித்து பலர் சிக்கி வருகின்றனர்.
சைபர் குற்றம் எவ்வளவு அடிக்கடி நிகழ்கிறது?
ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 97 சைபர் கிரைம் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது ஒவ்வொரு 37 வினாடிக்கும் ஒரு சைபர் கிரைம் பாதிப்பு ஏற்படுகிறது என சைபர் குற்றம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், உங்களின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து யாரேனும் மிரட்டினால் பெண்கள் தைரியமாக போலீஸில் புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் மௌனத்தால் உங்கள் குற்றவாளி பலனடைகிறார் என்பதை அறிய வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
24 மணி நேரமும் இயங்கும் எங்களது உதவி எண் 1930 அழைக்கவும் என சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளுக்கு ‘அமரன்’ படத்தை போட்டுக்காட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்!