சென்னை கொருக்குப்பேட்டை அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இன்ஜின் பழுதாகி நின்றதால் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு எண்ணூர் ரயில்வே பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது. கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் இஞ்சின் பழுதாகி நின்றது.


இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், மாற்று இஞ்சின் பொருத்தி நீலகிரி விரைவு ரயிலை எண்ணூர் பணிமனைக்கு கொண்டுசென்றனர்.

இதனை அடுத்து, புறநகர் மின்சார ரயில்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி , சென்ட்ரல் வழித்தடத்தில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


