spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கல்!

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கல்!

-

- Advertisement -

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக  ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் – உழவன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான கார்த்தி,  15 லட்சத்துக்கான காசோலையை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நிதியுதவி வழங்கிய நடிகர் கார்த்திக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

MUST READ