வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கும் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், வினோத், ஸ்ரீநாத் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


இருப்பினும், கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல், மூத்த அமைச்சர்கள் சிலரும் வேளாண் துறை அமைச்சர் வினோத்தும் பத்திரிகையாளர் சந்திப்பைத் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, மாற்று வழி (பின்வாசல்) வழியாகத் தங்களது அரசு வாகனங்களில் ஏறிப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர்கள்:
இன்றைய கூட்டத்தில் மேகதாது அணைப் பிரச்சனை, குறுவை சாகுபடி, விவசாயிகளுக்கான நீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு மிகமுக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக எழுப்பப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காமல் அமைச்சர்கள் மௌனம் காத்து நழுவியுள்ளனர்.
சில அமைச்சர்கள் பணி நிமித்தமாக அவ்வப்போது வெளியேறினாலும், பத்திரிகையாளர் சந்திப்புக்குத் தயாராக இருந்த ஊடகவியலாளர்களைச் சந்திக்காமல் அமைச்சர்கள் கள்ளமௌனம் காத்துத் தங்களது வாகனங்களில் விரைந்த செயல் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
துறைமுகம் தொகுதி விழாவில் அனல் பறந்த பேச்சு: சேகர்பாபுவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன்!
