JR 34 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களை பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக பிரதர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர், சிவகார்த்திகேயனின் 25ஆவது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ஜெயம் ரவி, டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஜெயம் ரவியின் 34ஆவது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக JR 34 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
#JR34🔥@actor_jayamravi
Produced by @Screensceneoffl #SundarArumugam#DaudeeJiwal #Shakkthivasu @TheDhaadiBoy @Ezhil_Dop @editorkathir @artdir_raja @MrRathna #Bakkiyam #Knifenaren #Gayathri @sabaaskar @senthilkumarsmc @skiran_kumar @APVMaran @stills_vishnu @onlynikil pic.twitter.com/7KQjV4Ldeq— ganesh.k.babu (@ganeshkbabu) December 14, 2024
அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் கணேஷ் கே பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.