- Advertisement -
பத்திரங்களை பதிவு செய்வதற்குரிய ஆவணங்கள் வரும் 10 நாட்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், அதிகப்படியான டோக்கன்களை வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், பதிவுத்துறை துணைத் தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி பங்கேற்றி இக்கூட்டத்தில், வரும் சனிக்கிழமை, மார்ச் 25-ஆம் தேதியன்று, மாநிலத்தின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது.


மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு பதிவுக்கான ஆவணங்கள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தினமும் கொடுக்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திட வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.


